

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிர்ப்பு அலை வீசுவதால் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் வருமான வரித்துறையை ஏவிவிட்டு மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையை சுட்டிகாட்டிய அவர், கனிமொழியின் வெற்றி வாய்பை தடுத்துவிடலாம் என்ற பா.ஜ.க.வினரின் கனவு பகல் கனவாகவே முடியும் என்று கூறியுள்ளார் . வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என்றும் அழகிரி தெரிவித்துள்ளார்.