"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து முடிவு பாராட்டத்தக்கது" - கே.எஸ். அழகிரி

ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெறும் தமிழக அரசின் முடிவு பாராட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார்.
"5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து முடிவு பாராட்டத்தக்கது" - கே.எஸ். அழகிரி
Published on
கள்ளக்குறிச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்றார். அப்போது அவர், நகரின் முக்கிய வீதிகளில், பொதுமக்கள், வணிகர்கள், மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களிடம் CAA வுக்கு எதிராக கையெழுத்து பெற்று ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளரகளை சந்தித்த அவர், ஐந்து மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை திரும்ப பெறும் தமிழக அரசின் முடிவு பாராட்டக்கூடிய ஒன்று என தெரிவித்தார். மேலும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பொறுப்பேற்காதது வன்மையாக கண்டிக்கதக்கது என அவர் தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com