கிரியாஸ் 177 வது கிளை திறப்பு விழா - அமைச்சர் பங்கேற்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கிரியாஸின் 177 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி கடையை திறந்து வைத்து பார்வையிட்டார்.திறப்பு விழாவை முன்னிட்டு கடையில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் பழைய பொருட்களை எக்சேஞ்ச் செய்து 25 ஆயிரம் வரை தள்ளுபடி பெறவும், கார்டு மூலம் வாங்கும் போது கட்டணங்கள் ஏதும் இல்லாமல் இலவச தங்கம் மற்றும் வெள்ளி நாணயத்தையும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்