21 பேர் கொத்தடிமைகளா? - பேரதிர்ச்சி சம்பவம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் பல ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 4 குடும்பங்களை சேர்ந்த 21 பேரை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவினர் மீட்டனர். இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயந்தி தலைமையிலான குழுவினர் களஆய்வு மேற்கொண்டு, தங்கமுத்து என்பவருக்குச் சொந்தமான செங்கல் சூளையில் வேலை செய்து வந்த மாரியப்பன், விநாயகம், ஆறுமுகம் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 21 பேரை மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்