விபத்து ஏற்படுத்தி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் : கூலிப்படையினர் இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்தவர் நீளம்மாள்.
விபத்து ஏற்படுத்தி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் : கூலிப்படையினர் இருவர் பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை சேர்ந்தவர் நீளம்மாள். இவரை மதுரையை சேர்ந்த ராம மூர்த்தி என்பவர், தொழில் முன்விரோதம் காரணமாக, கூலிப்படை உதவியுடன், சானமாவு அருகே நெடுஞ்சாலை பகுதியில், விபத்து ஏற்படுத்தி, காருடன் எரித்து கொல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக விசரணை நடத்தி, குற்றவாளிகளை போலீசார், தேடி வந்த நிலையில், மதுரையை சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த அம்பலவாணன் ஆகிய இரு கூலிப்படையினர், பெரியகுளம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த, போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து இருவரும், கிருஷ்ணகிரி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com