சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்

பெற்ற தாயையே, தலையில் கல்லை போட்டு மகன் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் கிருஷ்ணகிரி அருகே நடந்துள்ளது.
சொத்து பிரச்சினையால் பெற்ற தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன்
Published on

சேலம் மணியனூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது தாயார் வைரம்மாளை கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். கிருஷ்ணகிரி தர்கா பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு, வைரம்மாள் எதிர்பார்க்காத சமயத்தில் அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கார்த்திக், பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து பிரச்சினை தொடர்பாக வைரம்மாள்,

கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com