Krishnagiri | அலறல் சைலன்சர்கள்.. 40 பேர் மீது வழக்குப்பதிவு போக்குவரத்து போலீசார் அதிரடி
கிருஷ்ணகிரியில் அலறல் சைலன்சர்கள் மீது நடவடிக்கை
கிருஷ்ணகிரி நகரில் அதிக ஒலி எழுப்பும் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்கள் பொருத்திய இருசக்கர வாகனங்கள் தொடர்பாக போக்குவரத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை அருகே அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் இயக்கப்படுவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, முக்கிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களது வாகனங்களில் இருந்த சைலன்சர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உதிரி பாகக் கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த அதிக சத்தம் வரும் சைலன்சர்களும் பறிமுதல் செய்யப்பட்டன..
Next Story
