விசேஷத்துக்கு போகும் வழியில் பறிபோன உயிர்... - அதிர்ச்சி காட்சி

x

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மினி பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மத்தூர் அருகே உள்ள சோனார அள்ளி அருகே நிச்சயதார்த்தத்திற்காக உறவினர்களுடன் மினி பேருந்தில் 25க்கும் மேற்பட்ட நபர்கள் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேன் ஒன்று மினி பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மினி பேருந்தில் இருந்த திம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அன்புகுமார்-அனிதா தம்பதியரின் ஆறு வயது சிறுமி ரட்சிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பேருந்தில் பயணித்த 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்