காதலனை கரம்பிடிக்க சென்ற காதலி... இடம் தெரியாமல் பக்கத்து வீட்டில் புகுந்து பெண் வீட்டார் அடிதடி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே காதல் விவகாரம் ஊர் பிரச்சினையாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுகனேஸ்வரன் என்பவரும், பண்ணந்தூரை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஐஸ்வர்யாவின் பெற்றோர் வேறொரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதனால், காதலனை கரம்பிடிக்க அகரம் கிராமத்திற்கு ஐஸ்வர்யா சென்றுள்ளார். இதையறிந்த, அவரது பெற்றோர், அகரம் கிராமத்திற்கு சென்று சுகனேஸ்வரனுக்கு பதிலாக, பக்கத்து வீட்டை சேர்ந்த விஷ்வா என்ற நபரை தாக்கியதாக தெரிகிறது. இதைக்கண்ட, விஷ்வாவின் உறவினர்கள் ஐஸ்வர்யாவின் உறவினர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்து வந்த பண்ணந்தூர் கிராமத்தினரும், அகரம் கிராமத்தினரும் ஒருவரை ஒருவரை தாக்கிக்கொண்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
