ஜேசிபி-யை வைத்து வீட்டை இடித்த மாற்று சமூகத்தவர்... பெண்ணை அடித்து துன்புறுத்திய கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காந்தி நகர் பகுதியில் குறவர் இனத்தை சேர்ந்த சங்கர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டிற்கு பின்னால் மாற்று சமூகத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர் புதிதாக கடை கட்டியதாக கூறப்படுகிறது. சங்கரின் வீடு மற்றும் அவரது சித்தப்பா வீடு, குணசேகரனின் கடையை மறைப்பதாக அவ்வப்போது பிரச்னை எழுந்துள்ளது. இந்த நிலையில், சங்கரின் வீட்டை காலி செய்யும் நோக்கில், அவரது வீட்டை இடித்து, உடைமைகளை வீதியில் எறிந்து குணசேகரன் அராஜகம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. இந்த சம்பவத்தில் தாக்குதலுக்கு ஆளான காந்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com