ஒரே வீட்டை 12 பேரிடம் காட்டி ரூ.10 கோடி மோசடி

x

கிருஷ்ணகிரியில் ஒரே வீட்டை பலரிடமும் காட்டி அக்ரிமெண்ட் போட்டு 10 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காட்டிநாயனப்பள்ளி பகுதியை சேர்ந்த முனிசாமி தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, கிருஷ்ணகிரி ராயப்பமுதலி தெருவைச் சேர்ந்த பத்ரிநாத்துக்கு சொந்தமான வீட்டை விலை பேசி, அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்துள்ளனர். ஆனால் பத்திரப்பதிவு செய்ய பத்ரநாத் மற்றும் அவரது குடும்பத்தினர் முன் வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் முனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணையில் ஒரே வீட்டைக் காட்டி 12 பேரிடம் 10 கோடி ரூபாய் வரை வாங்கி ஏமாற்றி தற்போது பத்ரிநாத் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்