கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து - சந்தேகத்திற்குரிய தடயங்களை கைப்பற்றிய குழு | Kirshnagiri

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து

சந்தேகத்திற்குரிய தடயங்களை கைப்பற்றிய குழு

கிருஷ்ணகிரியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பாக வெடி பொருள் கட்டுப்பாட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர். பழையபேட்டை பகுதியில் ரவி என்பவருடைய பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில், 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்நிலையில் வேலூரில் இருந்து வந்த வெடி பொருள் கட்டுப்பாட்டு குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சந்தேகத்திற்குரிய சில தடயங்கள் மற்றும் பொருட்களை ஆய்வுக்காகவும் எடுத்து சென்றுள்ளனர். மேலும் இந்த விபத்தால் காயமடைந்து 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களிடமும் விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com