காதலில் விழுந்த மகள்.. தந்தை செய்த கொடூர செயல்

காதலில் விழுந்த மகள்.. தந்தை செய்த கொடூர செயல்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், மகளை காதலித்த இளைஞரை, தந்தை கழுத்தை நெரித்து கொன்று, சடலத்தை தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகவின் ராம்நகர் மாவட்டம் கும்பார தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் குமார். 25 வயது இளைஞரான இவர், அதே கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மற்றும் பொம்மையா ஆகியோருடன் நண்பராக நெருங்கி பழகி வந்துள்ளார். இதில், நாகராஜின் மகளை தினமும் கல்லூரியில் இருந்து நாகேஷ்குமார் பைக்கில் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இதில், இருவருக்குமிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படும் நிலையில், இருவருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு நாகராஜிடம் நாகேஷ்குமார் தெரிவித்திருக்கிறார். நாகேஷ்குமார் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நாகராஜ், ஒரு கட்டத்தில் நாகேஷை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார். தனது நண்பரான பொம்மையாவுடன் நாகேஷை மது அருந்த அழைத்த நாகராஜ், அவரை கழுத்தை நெரித்து கொன்ற நிலையில், ஓசூர் அருகேயுள்ள வனப்பகுதியில் சடலத்தை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் நாகராஜை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரது நண்பர் பொம்மையாவை வலை தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com