நோயாளியை மருத்துவமனை ஊழியர் கீழே தள்ளி விட்ட விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

நோயாளியை மருத்துவமனை ஊழியர் கீழே தள்ளி விட்ட விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

நோயாளியை மருத்துவமனை ஊழியர் தள்ளிவிட்ட விவகாரம் தொடர்பாக, ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் அறிக்கை அளிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Published on
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளி ஒருவரை மருத்துவமனை ஊழியர் பாஸ்கர் சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சுகாதாரத்துறை அமைச்சரின் உத்தரவின் படி ஊழியர் பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து, ஆட்சியர் அவரை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் இது தொடர்பான செய்திகளின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இது குறித்து தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com