திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது. நம்பெருமாள் உபநாச்சியர்கள் மற்றும் கிருஷ்ணருடன் புறப்பட்டு கருடமண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கு நடந்த உறியடி வைபவத்தை நம்பெருமாள் கண்டருளினார். கொரோனா பாதிப்பால் பக்தர்கள் இன்றி இந்த வைபவம் நடைபெற்றது.