சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு - இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதி விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் உயிரிழந்தார்.
சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு - இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதி விபத்து
Published on
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலை விபத்தில் சுகாதார ஆய்வாளர் உயிரிழந்தார். ஒரப்பம் பகுதியை சேர்ந்த பிரபு, ஒசூர் அருகேயுள்ள சூளகிரியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பணி முடிந்து தனது இரு சக்கர வாகனத்தில் சூளகிரி பேருந்து நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டெம்போ வாகனம், பிரபுவின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் துக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலே உயிரிழந்தார். விபத்து குறித்து சூளகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com