கமலுக்கு கே.பி.முனுசாமி ஆதரவுக்குரல்
கன்னட சர்ச்சை.. கமலுக்கு கே.பி.முனுசாமி ஆதரவுக்குரல்
கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிருஷ்ணகிரியில் மா சாகுபடிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும்...உடனடியாக மா வாரியம் அமைக்க வேண்டும்...பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கே.பி.முனுசாமி, நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல என்று குறிப்பிட்டார்.
Next Story
