Koyembedu | Police | கோயம்பேட்டில் மூக்குமுட்ட குடித்துவிட்டு அடாவடி - போலீஸ் எடுத்த அதிரடி ஆக்‌ஷன்

x

சென்னை கோயம்பேட்டில் மதுஅருந்திவிட்டு போலீசாரிடம் தகராறில் ஈடுபட்ட பெண்ணும் அவரது உறவினரும் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ரேவதி. இவரும் இவரது உறவினர் ராஜாவும் கடந்த புதன் கிழமை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வாடகை ஆட்டோவில் வந்தனர். குடிபோதையில் இருந்த இவர்கள், ஆட்டோவை விட்டு இறங்காமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. விசாரிக்க வந்த ரோந்து போலீசாரிடமும் அந்த பெண் அநாகரிகமாக பேசினார். இதனையடுத்து குடிபோதையில் இருந்த இருவரையும் போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்