

சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், செயற்கை முறையில் பழுக்கவைக்கபட்ட சுமார் 10 டன் வாழைப்பழங்களை பறிமுதல் அதிகாரிகள், பழங்களை பழுக்கவைக்க பயன்படுத்திய சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவற்றை கைப்பற்றினர். இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.