கோயம்பேடு மலர் சந்தை அருகில் உள்ள காலி இடத்தில் மலர் விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என கோயம்பேடு மலர் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.மாதவரம் பகுதியில் 30 கடைகள் மட்டுமே இயங்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 100 கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு மாதத்திற்கும் மேலாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக மலர் வியாபார சங்கத் தலைவர் தெரிவித்தார்.