ஆட்டோ ஸ்டாண்ட் தலைவரின் தலை, கழுத்து, கால், கை.. கொடூரமாக வெட்டி சாய்த்த கும்பல்

கோவில்பட்டி அருகே ஆட்டோ ஸ்டாண்ட் தலைவரைச் சுற்றிவளைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி தப்பியோடிய மர்மநபர்களைப் போலீசார் தேடிவருகின்றனர்.

நடராஜபுரம் ராஜகோபால் காலனியைச் சேர்ந்த ஞானபிரகாசம், உழவர்சந்தை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் தலைவராக இருந்துவருகிறார். இந்நிலை யில் நேற்றிரவு ஆட்டோ ஸ்டாண்டுக்கு வந்த மர்மநபர்கள் சிலர் ஞானப்பிரகா சத்தை சுற்றிவளைத்து அரிவாளால் அவரது தலை, கழுத்து, கை கால் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினர். ஞானப்பிரகாசத்தின் அலறல் சத்தம் கேட்டு அருகே டீக்கடை வைத்துள்ள ஞானப்பிரகாசத்தின் உறவினர் புனிதமேரி தடுக்க வந்துள்ளார். அவரையும் அந்த கும்பல் அவரது கைகளில் சரமாரியாக வெட்டி கீழே தள்ளிவிட்டு தப்பியோடியது. தகவலறிந்து சம்பவ இடத்திறு விரைந்த கோவில்பட்டி போலீசார் ஞான பிரகாசத்தையும் புனித மேரியையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் தப்பியோடிய மர்மநபர்களைத் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ ஸ்டாண்டில் கார் பார்க்கிங் செய்ய வந்த நபருக்கும் ஞானப்பிரகாசத்துக்கும் இடையே ஏற்பட்ட தகராறு கொலை வெறித் தாக்குதலுக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com