கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் அஞ்சலி | Kovai Selvaraj

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ் உடலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அஞ்சலி செலுத்தினார். கோவை லாலி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் உடல், அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். மறைந்த கோவை செல்வராஜ் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com