Kovai | Wild Elephant | இரவில் வலம் வந்த `பாகுபலி' | பார்த்து பதறிய வாகன ஓட்டிகள்

x

Kovai | Wild Elephant | இரவில் வலம் வந்த `பாகுபலி' | பார்த்து பதறிய வாகன ஓட்டிகள்

சாலையை கடந்த பாகுபலி காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்

இரவு நேரத்தில் மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்த, பாகுபலி காட்டு யானையை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வன விலங்குகள், உணவு மற்றும் நீர் நிலைகளை தேடி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. இந்நிலையில் கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து செல்வதற்காக பாகுபலி காட்டுயானை ஒன்று மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையை கடந்துள்ளது. இதனை பார்த்து அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள், வாகனத்தை சாலையின் இரு ஓரங்களிலும் நிறுத்திக் கொண்டனர். இதனையடுத்து பொது மக்கள் கூச்சலிட்டு காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.


Next Story

மேலும் செய்திகள்