கோவையில் ரூ.115 கோடி மதிப்பிலான புதிய மேம்பாலத்தில் வெள்ளம் போல் கரைபுரண்ட மழைநீர்

x

கோவையில் கனமழையால் மேம்பாலத்தில் மழை நீர் வடிய வழியில்லாமல் வெள்ளம்போல் ஓடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுமார் 115 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் கனமழை காரணமாக இந்த மேம்பாலத்தில் மழை நீர் வடிய வழியில்லாமல் வெள்ளம்போல் ஓடியது. இதனை காரில் சென்ற நபர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்