Kovai | TVK MLA | தேசிய கொடி ஏற்றி, மலர் தூவி எம்.எல்.ஏ கனிமொழி மரியாதை
Kovai | TVK MLA | தேசிய கொடி ஏற்றி, மலர் தூவி எம்.எல்.ஏ கனிமொழி மரியாதை
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற அலுவலகத்தில், 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தேசியக் கொடியை ஏற்றி, தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி தொகுதி மக்களின் குறைகளை கேட்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே தனது முக்கியக் கடமை என்றார். ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், உழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்வதாகவும் தெரிவித்தார். கவுண்டம்பாளையம் தொகுதியை தமிழகத்திலேயே முன்மாதிரித் தொகுதியாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும் என்றும், தமிழ் உணர்வுடனும் தேசப்பற்றுடனும் மக்கள் நலனை முன்னிறுத்தி தொடர்ந்து பயணிப்போம் என்றும் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்தார்.
