ரோட்டுல Careless-ஆ கிராஸ் பண்ணாதீங்க.. ஸ்கூட்டி பெண்ணுக்கு நேர்ந்த கோரம்.. திக் திக் வீடியோ
கோவை குனியமுத்தூரில், சாலையை கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் கடந்த பெண் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. விஜயலட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே பலர் இருசக்கர வாகனத்துடன் சாலையை கடக்க காத்து இருந்த நிலையில், பெண் ஒருவர் திடீரென சாலையை கடந்தார். அப்போது அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
Next Story
