Kovai | TN Police | கோவை கொடூரம்.. கஸ்டடி ஓவர்.. 3 மிருகங்களை மீண்டும் ஜெயிலில் போட்ட போலீசார்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைதான 3 பேரையும், போலீசார் ஒரு நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்த நிலையில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய தவசி என்கிற குணா, கருப்பசாமி என்கிற சதீஷ், காளீஸ்வரன் என்கிற கார்த்திக் ஆகிய 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க, பீளமேடு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி 3 பேரையும் போலீசார், கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். பிறகு மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்திய போலீசார், மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
