Kovai Student Rape Issue |தமிழகத்தை கொதிக்கவிட்ட கோவை மாணவி கூட்டு பலாத்காரத்தில் திடுக்கிடும் தகவல்
கோவை மாணவி கூட்டு பலாத்காரத்தில் புதிய தகவல்கள்
கோவையில் தனியார் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான நிலையம் அருகே பிருந்தாவனம் நகரை தாண்டி அமைந்துள்ள மைதானத்தில் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. தனியார் கல்லூரி மாணவி, ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கும்பல், ஆண் நண்பரை தாக்கி விட்டு கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இரவில் இருந்து அதிகாலை வரை மாணவியை சீரழித்த அந்த கும்பலை பிடிக்க கோவை மாநகர காவல் ஆணையர் தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஆண் நண்பர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, பிருந்தாவனம் பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நிகழ்ந்த மைதானத்தில், தடயவியல் நிபுணர் குழு, ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கல்லூரி மாணவியும், ஆண் நண்பரும் பயன்படுத்திய கார் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு, ரத்தக்கறைகள் படிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
