Kovai | ஹெல்மெட் போடாமல் குழந்தையுடன் சென்ற கர்ப்பிணி - எச்சரித்த ஓட்டுநர்..
#Kovai #GovtBus #Helmet #ViralVideo #ThanthiTV Kovai | ஹெல்மெட் போடாமல் குழந்தையுடன் சென்ற கர்ப்பிணி - எச்சரித்த ஓட்டுநர்.. நடுரோட்டில் பெண் வாக்குவாதம் கோவை அண்ணா சிலை அருகே, ஹெல்மெட் அணியாமல் ஒரே ஸ்கூட்டரில் கர்ப்பிணிப் பெண் மற்றும் குழந்தையுடன் பயணம் செய்த பெண்ணை, அரசு பேருந்து ஓட்டுநர் எச்சரித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. காந்திபுரம் நோக்கிச் சென்ற 96-ஆம் எண் அரசு நகரப் பேருந்தின் முன்பாக ஸ்கூட்டியை குறுக்கே நிறுத்திய பெண், ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஹெல்மெட் இல்லாமல் மூன்று பேர் ஆபத்தான முறையில் செல்வது குறித்து ஓட்டுநர் கேள்வி எழுப்பிய நிலையில், “அபராதம் நாங்கள் கட்டிக்கொள்கிறோம்; நீங்கள் யார் கேட்பதற்கு" என அந்தப் பெண் பதிலளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்ணா சிலை–காந்திபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் தலையிட்டு பெண்ணை சமாதானப்படுத்தி, பேருந்து செல்ல வழிவிட்டனர்.
