Fake payment bill.. சைபர் கிரைம் எடுத்த அதிரடி ஆக்க்ஷன்

x

கோவையில் போலி பேமெண்ட் செயலியை பயன்படுத்தி, ஏசி இயந்திரம் வாங்கி மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூலூர் பாப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் என்பவர் ஏசி விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அவரை வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்ட நபர் தனக்கு ஏசி இயந்திரம் வேண்டும் எனக் கூறி, 75 ஆயிரம் பணம் செலுத்தியதற்கான ரசீதை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார். வங்கிக் கணக்கில் பணம் வராததால் தினேஷ் குமார் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் உக்கடத்தை சேர்ந்த சேக் அப்துல்லா காதர், சலீம், மன்சூர் அலி ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் யூடியூப் பார்த்து போலி பேமண்ட் செயலி மூலம்16 ஏசி இயந்திரங்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்து விசாரணையில் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்