கோவை மதுக்கரை சுங்கச்சாவடி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற, 10 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி உணவுக்கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் நடத்திய வாகன சோதனையில், காய்கறி கழிவுகளுக்கு கீழ், ரேசன் அரிசியை மறைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர், லாரி ஓட்டுனரும், உரிமையாளருமான முரளிதரன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.