டும்..டும்.. டும்.. கடல் கடந்த காதல் - நெதர்லாந்து இளைஞரை கரம்பிடித்த கோவை பெண்

x

கோவையை சேர்ந்த பெண், நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தனது காதலரை, குடும்பத்தினரின் சம்மதத்தோடு கரம் பிடித்துள்ளார். கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரேமலதா, நெதர்லாந்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிவரும் ரமோன் ஸ்டீன்ஹீஸ் என்பருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்ததை அடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதன்படி, இருவீட்டார் சம்மதத்துடன் பிரேமலதாவுக்கும், நெதர்லாந்து இளைஞருக்கும் கோவையில் தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்