Kovai | Elephant | தாயை தேடி அலையும் குட்டி யானை | பார்ப்போரை கலங்கடிக்கும் காட்சி

தாயை பிரிந்த குட்டியானை - யானை கூட்டத்துடன் சேர்க்க வனத்துறை முயற்சி கோவை மாவட்டம் சிறுமுகை அருகே குட்டி யானை ஒன்று தாய் யானையை பிரிந்து தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. லிங்காபுரம் வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்ததாக கூறப்படும் குட்டி யானை, கடந்த இரண்டு நாட்களாக வனச்சோதனை சாவடி அருகே அலைந்து திரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணித்து, அதை மீண்டும் தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com