Kovai | drunkard | லாரி ஓட்டுநரை போதையில் பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் கைது

x

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் போதையில் லாரி ஓட்டுநரை பீர் பாட்டிலால் தாக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுநரான மூர்த்தி என்பவர் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார்... அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த அஷ்ரப், பர்கதுல்லா ஆகியோருக்கும் மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது...

இதில், மூர்த்தி மீது அஷ்ரப்பும் பர்கதுல்லாவும் பீர் பாட்டிலால் தாக்கியதில் மூர்த்தி படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்