100 சதவீத சொத்து வரிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை மாநகராட்சியில் 100 சதவீத சொத்துவரி உயர்வை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
100 சதவீத சொத்து வரிக்கு எதிர்ப்பு : திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம்
Published on
கோவை மாநகராட்சியில் 100 சதவீத சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கிய குடிநீர் விநியோக உரிமையை கண்டித்தும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 27 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் அக்டோபர் 10 ஆம் தேதி கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல் துறையில் அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள், சி.பி.எம், சி.பி.ஐ, காங்கிரஸ், கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com