Kovai | அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக்கிய திமுக நிர்வாகி- அதிர்ச்சி வீடியோ

கோவை மாவட்டம் வடவள்ளியில் மக்களின் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, திமுக நிர்வாகி தனது வீடாக மாற்றி குடும்பத்துடன் குடியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. அரசு கட்டிடத்தை, திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஷியாம் சுந்தர், தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து குடும்பத்துடன் செட்டில் ஆகியுள்ளார். மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் சமையல் பாத்திரங்களும், நோயாளிகள் இருக்க வேண்டிய இடத்தில் படுக்கைகளும் இருப்பதைக் கண்டு மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர். இது குறித்து தட்டிக்கேட்ட சமூக ஆர்வலரிடம், மருத்துவரிடம் அனுமதி பெற்றுதான் தங்கியுள்ளேன் என, திமுக நிர்வாகி பதிலளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com