Kovai | Deer | உயிர் பயத்தில் திடீரென கடைக்குள் புகுந்த புள்ளிமான் - அதிர்ச்சி வீடியோ
தெருநாய்கள் துரத்தியதால் கடைக்குள் புகுந்த புள்ளிமான்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே
கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் கோத்தகிரி சாலையை கடந்து ஓடந்துறை காப்பு காட்டுக்குள் சென்றபோது தெருநாய்கள் துரத்தியதால் மான் மிரண்டு வனப்பகுதிக்குள் செல்ல வழி தெரியாமல் அங்கும் இங்கும் தவித்து சாலை ஓரத்தில் இருந்த கடைகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், கடைக்குள் புகுந்த புள்ளிமான் கடையிலிருந்து வெளியேறி கோத்தகிரி சாலையை கடந்து கல்லார் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
Next Story
