Kovai | College Student | தோழிக்கு வந்த போன் கால்.. சக மாணவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர்..

x

தனியார் கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர். கோவை மாவட்டம் சூலூர் அருகே, தனியார் கல்லூரி மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு, தனது தோழிக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்துப் பேசிய மாணவர் தினேஷ்குமாருக்கும், எதிர்முனையில் பேசிய அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் கௌதம் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முன்விரோதம் காரணமாக, கல்லூரி அருகே நின்று கொண்டிருந்த தினேஷ்குமாரை, கௌதம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆபாசமாக பேசி, மறைத்து வைத்திருந்த கத்தியால் தினேஷின் கை மற்றும் கால்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்