பவுன்சர்களோடு சர்ச்சுக்கு வந்த பிஷப்பால் பரபரபபு
கோவை சிஎஸ்ஐ இம்மானுவேல் ஆலய ஆயர், பவுன்சர்களை அழைத்து வந்த விவகாரத்தில், திருச்சபை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள சிஎஸ்ஐ இமானுவேல் ஆலயத்தில் ஆயராக இருப்பவர் பிரின்ஸ் கால்வின். இந்த நிலையில் ஆலயத்தில் நடைபெற்ற முக்காடு போடுதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆலய ஆயர், பவுன்சர்களை அழைத்து வந்து முறைகேடாக அவருடைய மனைவி ஐடா செல்வகுமாரியை முக்காடு போட வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக, திருச்சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆயர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
