"ஏன் விசா கிடைக்கவில்லை என்று தெரியவில்லை" - வசந்தி

ஸ்பெயினில் நடைபெறும் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விசா கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும் என ஓட்ட பந்தய வீராங்கனை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த வசந்தி என்பவரின் இரண்டு குழந்தைகளும் விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றபோது, வசந்தியையும் ஓட்டப் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள பயிற்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, பயிற்சி எடுத்து ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று பல பதக்கங்களை வசந்தி வென்றுள்ளார். இந்த நிலையில், தற்போது ஸ்பெயினில் நடக்கும் சர்வதேச விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். கடந்த ஒரு வார காலமாக விசா பணிகளுக்காக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு மாறி மாறி சென்றும் இதுவரை விசா கிடைக்கவில்லை.சரியான நேரத்தில் விசா கிடைக்கவில்லை என்றால் போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும் என்பதால் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று வசந்தி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com