ஈஷா சிவராத்திரி.. சக்திவாய்ந்த தியானத்தில் பங்கேற்கும் அமித்ஷா

x

கோவை ஈஷா யோக மையத்தில், வரும் 26-ஆம் தேதி நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஈஷா அறக்கட்டளையின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுவாமி பாரகா இந்த தகவலை தெரிவித்தார். ஈஷாவில் ஆதியோகி சிலை முன்பு 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை நடைபெறும் விழாவில், சக்தி வாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்