மஞ்சள் நிறமாக மாறிய கொசஸ்தலை ஆறு.. - பீதியில் மீனவர்கள் ..

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீண்டும் மஞ்சள் நிற கழிவு நீர் மிதப்பதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆற்றில் இரண்டு மாதங்களுக்கு முன்பு மஞ்சள் நிற கழிவுநீர் கலந்து வந்த நிலையில், மீண்டும் அதே போன்று கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால், மீன் மற்றும் இறால்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதாக மீனவர்கள் கூறுகின்றனர். இந்த கழிவுநீர், அருகில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறதா என மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com