முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா-அதிமுக நிர்வாகி வழிபாடு
ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சிஜெயராம்பேட்டையில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. வண்ண விளக்குகள், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில், முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அம்மன் வாகனம் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. ஆங்காங்கே காத்திருந்த பக்தர்கள், தேங்காய் உடைத்து அம்மனை தரிசனம் செய்தனர். ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், சிறப்பு விருந்தினராக விழாவில் பங்கேற்றார். விழாக் குழு சார்பில், எஸ்.எம்.சுகுமாருக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுவாமி தரிசனத்தை தொடர்ந்து விழாக்குழுவினருடன் கலந்துரையாடிய ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார், கோவிலுக்கு நன்கொடை வழங்கினார்.
