Koomapatti Thangapandi|``வடக்கனா நீ’’ -வலியில் கதறிய `கூமாபட்டி' தங்கபாண்டியை நிலைகுலைய விட்ட கேள்வி

x

கூமாபட்டி பிரபலம் தங்கபாண்டி பேருந்தில் வரும் போது விபத்து ஏற்பட்டதில், எலும்பு முறிவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பிரபலம் தங்கபாண்டி, சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருக்கையில், கிருஷ்ணன் கோவில் அருகே இயற்கை உபாதை கழிக்க இறங்கும் போது, பேருந்தினுள் விழுந்து இடது கை தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. வலி தாங்கமுடியவில்லை, மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என ஓட்டுனரிடம் கூறியதற்கு, உன்னை பார்த்தல் வட இந்தியன் போல் இருக்கிறது என கடினமாக நடந்துகொண்டதாக கூறுகிறார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தங்கபாண்டியன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் கூறியுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்