கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கல்குவாரி : கல்குவாரிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை

கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, கல் குவாரி நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கல்குவாரி : கல்குவாரிக்கு தடை விதித்தது உயர்நீதிமன்ற கிளை
Published on
கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே, கல் குவாரி நடத்த தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே எருக்கன்துறை என்கிற கிராமத்தில் கல் குவாரி நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட, பொதுநல வழக்கு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் குவாரி செயல்பட தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக, பொதுத்துறை செயலர், சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணைய தலைவர், கனிமவளத் துறை இயக்குநர், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com