என்ன கொங்கு ஈஸ்வரனே இப்படி சொல்லிட்டாரே..!
இலவச வேட்டி, சேலைகள் இந்தாண்டு முழுமையாக பொங்கலுக்கு முன் கொடுப்பது சாத்தியமில்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், நெசவாளர்கள் இரவுபகல் பாராமல் உழைத்தாலும், 70 சதவீத வேட்டிகளும், 50 சதவீத சேலைகளுமே தகுந்த நேரத்தில் உற்பத்தியாக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விரைவாக இலவச வேட்டி, சேலைகள் விநியோகம் செய்ய துறை அமைச்சரும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story
