தொடர்மழை காரணமாக பாக்கு அறுவடை பாதிப்பு - கொல்லிமலை அடிவார விவசாயிகள் கவலை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்மழை காரணமாக பாக்கு அறுவடை பாதிப்பு - கொல்லிமலை அடிவார விவசாயிகள் கவலை
Published on
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவார பகுதிகளில் 100 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் தொடங்கி டிசம்பர் வரை 3 மாதங்கள் பாக்கு அறுவடை நடைபெறும். கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால், பாக்கு அறுவடை செய்ய முடியாத சூழல் உள்ளது. இதனால் பாக்குகள் மரத்தில் பழுத்து வருகிறது. வெயிலில் உலத்த முடியாததால் அறுவடை செய்த பாக்குகள் அழுகி வருகின்றன. பாக்கின் தரம் குறைந்தால் உரிய விலை கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com