கோடநாடு கொலை வழக்கு : பத்திரிகையாளர் மீதான மான நஷ்ட வழக்கு - வழக்கை நிராகரிக்க கோரிய பத்திரிகையாளர் சார்பில் மனு

முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.
கோடநாடு கொலை வழக்கு : பத்திரிகையாளர் மீதான மான நஷ்ட வழக்கு - வழக்கை நிராகரிக்க கோரிய பத்திரிகையாளர் சார்பில் மனு
Published on

கோடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி ஆவணபடம் வெளியிட்டதற்காக முதல்வர் பழனிசாமி மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேல், சயன், வாலையாறு மனோஜ், ஜிபின், ஷிஜா அணில்,

ராதாகிருஷ்ணன் ஆகிய 7 எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டதுடன் 1 கோடியே 10 லட்சம் இழப்பீடும் கோரியிருந்தார். முதல்வர் பழனிசாமி தொடர்ந்த மான நஷ்ட வழக்கை நிராகரிக்க கோரி பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் 2019 ஜூன் 18 ல் மனுத்தாக்கல் செய்தார். முதல்வர் வழக்கை நிராகரிக்க கோரி மேத்யூ சாமுவேல் தொடர்ந்த வழக்கு உத்தரவிற்காக நீதிபதி பி.டி.ஆஷா முன் காலை 10:30 மணிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com