Chennai | சென்னை தொழிலதிபரிடம் வேலையை காட்டிய கேடி லேடிசிக்கினார் கோடம்பாக்கம் ரேகா

x

தொழிலதிபரிடம் பணம் கொள்ளை - பெண் உட்பட இருவர் கைது

சென்னை சூளைமேட்டில் தொழிலதிபரிடம், 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துவிட்டு சென்ற சம்பவத்தில் பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோடம்பாக்கத்தை சேர்ந்த ரேகா மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த நவீன் ஆகிய இருவர் செங்கோட்டையில் தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவர் மீது ஏற்கனவே பணம் பறித்த வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது குறிப்பிடத் தக்கது.


Next Story

மேலும் செய்திகள்