கலவரத்தில் முடிந்த கிடா வெட்டு பூஜை...மகனை காப்பாற்ற வந்த தந்தை கொலை...

x

தஞ்சாவூர்- பெருமாக்கநல்லூர்

கலவரத்தில் முடிந்த கிடா வெட்டு பூஜை...

மகனை காப்பாற்ற வந்த தந்தை கொலை...

மது போதையால் நடந்த வாக்குவாதம்...

சமாதானம் செய்த விவசாயி கொலை...

கார்த்திகேயன்

இறந்தவரின் மகன்

கிராமங்கள்ல நடக்குற ஊர் திருவிழா, கிடா வெட்டு இதெல்லாம், சொந்த பந்தத்த ஒன்னு சேக்க நடத்த பட்டாலும், போதையால நடக்குற எதோ ஒரு குற்ற சம்பவம் ஊர்மக்களோட ஒட்டு மொத்த ஒற்றுமையையும் ஒன்னில்லாம பண்ணிடும். இங்கயும் அப்படி தான் போதையால ஒரு கொலை விழுந்து ஊரே ரெண்டாகி இருக்கு...

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அருகே உள்ளது பெருமாக்கநல்லூர்.

அமைதியான இந்த கிராமத்தில், நள்ளிரவில் நடந்த களேபரத்தால் , ஒரு கொலை விழுந்து இந்த கிராமத்தின் மொத்த அமைதியையும் சீர்குலைத்து, பதற்றத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கண் இமைக்கு நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கிறது.

ஒரு உயிரை பறிகொடுத்த உறவினர்கள் அழுகைக்கு கூட வாய் திறக்காமல், அச்சத்தில் வாயடைத்து போயிருக்கிறார்கள்.

கொல்லப்பட்டவர் பாபநாசம் தாலுக்காவில் உள்ள பெருமாக்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கர். 58 வயதான இவர் விவசாயம் செய்து வந்திருக்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், கார்த்திக் என்ற மகனும் உள்ளனர்.

சம்பவ நாளன்று, சாலியமங்கலத்தில் உள்ள குல தெய்வ கோவிலில், கிடா வெட்டு பூஜை நடத்த உறவினர்கள் ஒன்று கூடி இருக்கிறார்கள்.

பய பக்தியோடு கோவிலுக்கு சென்ற கும்பல், பூஜைகள் தொடங்கும் முன்பே, மது பாட்டில்களோடு தங்களுக்கான பூஜையை தொடங்கி இருக்கிறார்கள்.

குல தெய்வ கோவிலில் வெட்டப்பட்ட கிடா, விருந்தாகி செறிப்பதற்குள் தான், சங்கர் சரமரியாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் போலீசார், சங்கர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக, அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நடந்த பயங்கரத்துக்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்ட பெயர்கள் செல்லப்பாவும் அவரது மகன் அருண்.

குல தெய்வ கோவிலில் கிடா வெட்டி தடபுடலாக நடந்த கறி விருந்தில், சங்கரின் உறவினரான அருண் என்பவர், தலைக்கேறிய போதையில், ஆபாச வார்த்தைகள் கூறி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சங்கரின் மகன் கார்த்திக்கும் அருணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறுவதற்குள், உடனிருந்த உறவினர்கள், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி இருக்கிறார்கள்.

வழிபாடு முடிந்து பெருமாக்கநல்லூர் கிராமத்திற்கு திரும்பிய கார்த்திக், அருணின் தந்தை செல்லப்பாவிடம், தன் தந்தையை இழிவாக பேசியதற்கு நியாயம் கேட்டிருக்கிறார். இதனால் இருதரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருக்கிறது

நள்ளிரவில் வெடித்த கை கலப்பில் அருணும் அவரது தந்தை செல்லப்பாவும் சேர்ந்து சேகரையும் கார்த்திக்கையும் உருட்டு கட்டையால் துரத்தி துரத்தி அடித்திருக்கிறார்கள். நடந்த அந்த கொலைவெறி தாக்குதலில் படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கி

இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த பாபநாசம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்த நிலையில். தலைமறைவாக இருந்த செல்லப்பாவையும் அவரது மகன் அருணையும் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்


Next Story

மேலும் செய்திகள்